1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2017 (17:26 IST)

இந்து கோயில்களை இடித்து தரைமட்டமாக்க வேண்டும்; திருமாவளவன் ஆவேசம்

இந்தியாவில் உள்ள இந்து கோயில்களை இடித்துவிட்டு புத்த விகார்களை கட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

 
பெரம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார். அப்போது அவர் இந்து கோயில்களை இடிக்க வேண்டும் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது:-
 
தற்போது சிவன் கோயில்களும், பெருமாள் கோயில்களும் அமைந்துள்ள இடங்கள் அனைத்தும் ஒருகாலத்தில் பௌத்த விகார்களாக இருந்தன. அந்த பௌத்த விகார்களை இடித்துவிட்டுதான் சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த கோயில்களை இடித்து தரைமட்டமாக்கி விட்டு அவற்றின் மீது புத்த விகார்களை கட்டுங்கள் என்று கூறியுள்ளார்.
 
திருமாவளவனின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.