போயஸ் கார்டன் இல்லத்திற்கு பூங்குன்றனும் வருகை
இன்று இரவு திடீர் திருப்பமாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கே நுழைந்து பூங்குன்றன் அறையில் சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் அதிர்ச்சி அடைந்து அவசர அவசரமாக போயஸ் கார்டன் இல்லத்திற்கு சற்றுமுன்னர் ஜெயா டிவி எம்.டி விவேக் வருகை தந்தார் என்பதை சற்றுமுன்னர் பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் குழு ஒன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூங்குன்றனை போயஸ் கார்டன் இல்லத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இதனால் பரபரப்பு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த சோதனை குறித்து தினகரன் அணியினர் பொங்கி எழுந்து ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியினர் வழக்கம்போல் அமைதியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.