வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : சனி, 11 நவம்பர் 2017 (18:10 IST)

ஜெயலலிதாவின் உயிலை கண்டுபிடிக்கத்தான் இந்த ரெய்டா? திருமாவளவன் கேள்வி

நேற்று முன் தினம் முதல் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சுமார் 1800 அதிகாரிகள் நடத்தி வரும் இந்த சோதனைக்கு அரசியல் காரணம் உள்பட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த ரெய்டே ஜெயலலிதா எழுதிய உயிலை கண்டுபிடிக்கவும், அவர் மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை கண்டுபிடிக்கவும் தான் என்று கூறப்படுகிறது


 


ஜெயலலிதாவின் உயில் பென் டிரைவர் வடிவத்தில் இருப்பதாகவும், அது சசிகலா உறவினர்களில் ஒருவரிடம் இருப்பதாகவும் வெளிவந்த தகவலை அடுத்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.

இதுகுறித்து கருத்து கூறிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 'ஜெயலலிதா உயில் எழுதி வைத்திருந்தால் அதை யாராலும் மறைத்துவிட முடியாது என்றும், அவர் உயில் எழுதி வைத்திருந்தால் அரசு அதை வெளிப்படையாக சொல்லிவிட்டே எடுக்கலாம் என்றும் கூறியுள்ளார்.