செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (20:12 IST)

ரஜினியின் கிருஷ்ணன் - அர்ஜூனன் உவமை குறித்து திருமாவளவன் கருத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை நடைபெற்ற வெங்கையா நாயுடு அவர்கள் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த விழாவில் அவர் பேசியபோது, 'மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணன் - அர்ஜுனன் போன்றவர்கள் என்றும் அமித்ஷாவை இப்போது யார் என்று அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றும், காஷ்மீர் விவகாரத்தை அமித்ஷ மிக அருமையாக கையாண்டார் என்றும் பாராட்டு தெரிவித்தார் 
 
ரஜினியின் இந்த கருத்துக்கு தமிழக அரசியல்வாதி சிலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து  வருகின்றனர். இந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து கூறிய போது 'மோடி - அமித்ஷாவை மகாபாரதத்திலிருந்து கிருஷ்ணன் - அர்ஜுனனுக்கு உவமையாக ரஜினி கூறியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ரஜினியிடமிருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர் பார்க்க முடியாது. எனவே அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்
 
 
காஷ்மீரில் ஏற்பட்ட மாற்றத்தை காஷ்மீர் மக்களே ஏற்றுக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் பாகிஸ்தானும், தமிழகத்தில் உள்ள ஒருசில கட்சிகளும் மட்டுமே இன்னும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது