உடையும் அதிமுக - பாமக கூட்டணி? அன்புமணி எம்பி சீட் கனவிற்கு ஆப்பு!
பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி மாநிலங்களவை எம்.பி பதவி பெறும் கனவும் கலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணி மண்ணைக் கவ்வியுள்ளது. அதிமுக – பாமக – தேமுதிக என வலுவான கூட்டணி அமைத்தும் அவர்களால் ஒருத் தொகுதிக்கு மேல் வெற்றி பெறமுடியவில்லை.
இதில் 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவுக்கு அதிர்ச்சி அதிகம். தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி கிட்டதட்ட 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார். ஆனால், ஒப்பந்தத்தின் படி 7 மக்களவை சீட் மற்றும் 1 மாநிலங்களவை சீட் என பேசியுள்தால் எம்பி சீட் கிடைக்கும் என அன்புமணி கனவு கண்டார்.
ஆனால், அதிமுக தலைமை தோல்வியின் காரணமாக இருக்கும் கடுப்பிற்கும், கட்சிக்குளேயே இருக்கும் அதிருப்தியின் காரணமாகவும் அதிமுக பாமகவிற்கு எம்பி பதவியை வழங்காது என்று கூறுகிறார்கள். இதனால், அதிமுக - பாமக கூட்டணி உடையவும் வாய்ப்புள்ளதாம்.