வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 23 மே 2019 (16:32 IST)

இந்தியாவில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் திமுக

மக்களவைதேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் மூன்றாவது அல்லது நான்காவது மிகப்பெரிய கட்சியாக  திமுக உருவெடுக்க உள்ளது. தற்போது திமுக 20 இடங்களில் 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் காங்கிரசுக்கு அடுத்து பெரிய  கட்சியாக இருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மொத்தத்தில் மத்தியில் அமையும் ஆட்சியை பொறுத்தே, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வெல்லப் போகும் தொகுதிகளைப்  பொறுத்தும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழுமா அல்லது அதிமுக ஆட்சி தொடருமா என்ற நிலை இருந்தது. தற்போது பாஜக வெற்றி  நிலையில் இருந்தாலும், தமிழகத்தில் அதிமுக-வுடன் ஏற்பட்ட கூட்டணியில் 5 இடங்களிலுமே வாஷ் அவுட் ஆகி உள்ளது.
 
தமிழகத்தை பொருத்தமட்டில் 39 தொகுதிகளில் திமுக 37 தொகுதிகளிலும் அதிமுக 2 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இது பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபையில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
 
கலைஞர் கருணாநிதி மறைவிற்கு பின்னர் திமுக தலைவராக கட்சியை வழிநடத்தி வரும் ஸ்டாலின் அபார சாதனை செய்துள்ளார். இதன்  மூலம் திமுக நாடாளுமன்றத்தில் 5-ஆவது மிகப் பெரிய கட்சியாக திகழ்கிறது.