திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (16:18 IST)

திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று தான் திருக்குறளை எழுதினார்: திருமாவளவன்

திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று தான் திருக்குறளை எழுதினார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இன்று தெய்வநாயகம் என்பவர் எழுதிய திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் என்ற நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.
 
இந்த நூலை வெளியிட்டு அவர் பேசியபோது இந்த நூலில் கூறியவாறு திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று தான் திருக்குறளை எழுதினார் என்ற கருத்து ஆய்வுக்கு உட்பட வேண்டியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று ஒரு கிறிஸ்துவராக இருந்தே திருக்குறள் எழுதினார் என்ற பேராசிரியர் தெய்வநாயகம் அந்த நூலில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது