தொடர்புடைய செய்திகள்
- வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை! – வானிலை ஆய்வு மையம்!
- வெற்றி வேட்பாளர்களுடன் புகைப்படம்; ஒரமாக ஒதுங்கிய விஜய்! – வைரலாகும் புகைப்படம்!
- பள்ளிகள் திறப்பு… ஆனா மதிய உணவு கிடையாது! – புதுச்சேரி அரசு அறிவிப்பு!
- ஓபிஎஸ் பேசுனதுல என்ன தப்பு.. சப்போர்ட்டுக்கு வந்த டிடிவி! – அதிமுகவில் சலசலப்பு!
- பருவமழை தொடங்கும் முன்னே நிரம்பும் மேட்டூர் அணை! – விவசாயிகள் மகிழ்ச்சி!
தமிழ்நாட்டுக்கென தனிக் கொடி வேண்டும்! – திருமாவளவன் கோரிக்கை!
தமிழகத்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்திற்கென பிரத்யேக கொடியை அறிமுகம் செய்ய வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்னிந்தியாவில் மொழிவாரியாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகம் பிரிக்கப்பட்ட நாளை மாநிலங்களின் பிறந்தநாளாக அந்தந்த மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. நவம்பர் 1அன்று இந்த மாநிலங்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள விசிக தலைவர் திருமாவளவன் ” தென்னிந்திய மாநிலங்கள், மாநிலம் பிறந்தநாளை பூரிப்போடு கொண்டாடி வருகின்றனர். கர்நாடகா மாநிலம் தனி மாநிலக் கொடி ஏற்றி கொண்டாடி வருவதைப் பார்க்கிறோம். எனவே தமிழக அரசு இந்த நாளை கொண்டாடுவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், தமிழகத்திற்கும் பிரத்யேக கொடியை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
