மகளிர் உரிமைத் தொகை நிபந்தனைகளில் திருத்தம் தேவை: திருமாவளவன்
ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பெறுவதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிபந்தனைகளில் திருத்தம் தேவை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 15 முதல் தமிழகத்தில் தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு உரிமை தொகை ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் ஜூன் 20ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த தொகையை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சத்திற்கு மேல் வருமானம் இருக்க கூடா,து சொந்த வாகனம் இருக்கக் கூடாது, வருமான வரி கட்டியிருக்கக்கூடாது உள்பட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.
இந்த நிலையில் இந்த நிபந்தனைகள் குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் பொதுமக்களின் உணர்வுகளை மதித்து மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான நிபந்தனைகளில் திருத்தம் கொண்டுவர முதல்வர் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது உள்ள நிபந்தனைகளால் பெரும்பாலான பெண்கள் உரிமை தொகை பெற முடியாத நிலை இருப்பதால் திருத்தம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Edited by Mahendran