வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 10 ஜூலை 2023 (21:16 IST)

''மகளிர் உரிமைத் தொகை : எங்கும் ஏமாற்றம் எதிலும் ஏமாற்றம்''- ராஜேஸ்வரி பிரியா

rajeshwari priya
'மகளிர் உரிமைத்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியாத அளவிற்கு தவிக்கின்றனர்' என்று ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார்.

தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 முதல் தொடங்க உள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டன என்பதும் யார் யாருக்கு இந்த பணம் கிடைக்கும் என்பது குறித்து அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு  வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது போல் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதுதொடர்பாக டி.டி.வி. தினகரன் ‘’அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்ததற்கு நேர்மாறாக தகுதியுள்ள மகளிருக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது தகுதிப்படைத்த மகளிர் யார் என்ற அறிவிப்பை முதலமைச்சர் திரு.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்  என்று  தெரிவித்திருந்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 8 ஆம் தேதி ‘’முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நேற்று மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளை வெளியிட்டிருந்தது. இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘’வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திறனற்ற திமுக அரசு என்று தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா இன்று  தன் டுவிட்டர் பக்கத்தில்'' அனைத்து பெண்களுக்கும் 1000 ரூ கொடுக்கப்படும் என்று  நீங்கள் கூறிய பொய்யான வாக்குறுதிக்காக இன்று பெண்கள் 1000 பொய்கள் கூறினாலும் அந்த தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியாத அளவிற்கு தவிக்கிறார்கள்

எங்கும் ஏமாற்றம்!!எதிலும் ஏமாற்றம்….!'' என்று  பதிவிட்டு, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு டேக் செய்துள்ளார்.