வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (15:37 IST)

ஹரியானா போல இந்தியா முழுவதும் கலவரங்கள் பரவ வாய்ப்பு: திருமாவளவன்..!

ஹரியானா போல இந்தியா முழுவதும் கலவரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  
 
மணிப்பூர் பிரச்சனை குறித்து ஜனாதிபதியுடன் விளக்கம் அளிக்கப்பட்டது என்றும் ஒருசில வார்த்தைகளை மட்டுமே குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேசினார் என்றும் அவர் உடனான சந்திப்பில் மனநிறைவு இல்லை என்றும் திருமாவளவன் தெரிவித்தார். 
 
அவையை முடக்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் நோக்கம் அல்ல என்றும் ஆளுங்கட்சியின் பிடிவாதமே நாடாளுமன்ற முழக்கத்திற்கு காரணம் என்றும் தெரிவித்தார். 
 
 ஹரியானாவில் நிகழ்ந்த படுகொலை சங் பரிவார அமைப்புகளின் நீண்டகால செயல் திட்டங்களில் ஒன்று என்றும் இந்தியா முழுவதும் இது போன்ற கலவரங்கள் பரவ வாய்ப்பு இருக்கிறது என்றும் தமிழ்நாட்டில் நடைபெறும் பாதயாத்திரை அமைதியாக நிறைவடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran