1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 31 ஜூலை 2023 (22:20 IST)

ஹரியானாவில் இரு பிரிவினர் இடையே மோதல்...இண்டர் நெட்சேவைக்கு தடை

HARYANA
ஹரியானா மாநிலத்தின்  மேவாட் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் பேரணியில் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்ட   நிலையில் இண்டர் நெட் சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

ஹரியானா மா நிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள மேவாட் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் பேரணியில் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த வன்முறையில் புதுடில்லியின் புறநகர்ப் பகுதியான  சோஹ்னா பைபாஸில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு தீ வைக்கப்பட்டன.

தற்போது வன்முறை சம்பத்தை அடுத்து, அங்கு இண்டர்னெட் சேவைகள் தடை செய்யப்பட்டு, ஒரு வாரத்திற்கு144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி, குகி ஆகிய இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.