திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (13:53 IST)

‘’நாம் தமிழர் கட்சி சிறுபான்மையினரை இழிவுபடுத்த வேண்டிய அவசியம் என்ன?’’-திருமாவளவன் கேள்வி

thiruma -seeman
‘’நாம் தமிழர் கட்சி சிறுபான்மையினரை இழிவுபடுத்த வேண்டிய அவசியம் என்ன?’’ என்று விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான்.  இக்கட்சியின் சார்பில் மணிப்பூரில் குகி பழங்குடி இன மக்களுக்கு எதிரான அநீதியைக் கண்டித்து,   சமீபத்தில்   சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘’மணிப்பூரில் இருந்து மக்கள் யாரும் வந்து நமக்கு ஓட்டுப்போவதில்லை, இங்கேயுள்ள கிரிஸ்தவர்களும் நமக்கு ஓட்டளிக்கப் போவதில்லை… கிருஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள்  தேவனின் பிள்ளைகள் என்று  நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவர்கள் சாத்தானின் குழந்தைகள் ‘’என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இந்த நிலையில், இன்று சிறுபான்மையினர் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த சீமான், மதத்தைவிட, சாதியைவிட மொழி இனம் தான்.அப்படி என்றால் இங்கிருக்கும் கிருஸ்தவனும், இஸ்லாமியனும் தமிழன். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். வந்தவர் போனவர் எல்லாம் சிறுபான்மையினர் என்று கூறினால் செருப்பை கழட்டி அடிப்பேன் என்று சொல்லுகிறேன்.எதற்காக சிறுபான்மையினர் என்று கூறுகிறீர்கள் என்று ஆவேசமாகப் பேசியிருந்தார்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், சீமானின் பேச்சு பற்றி விசிக தலைவர் திருமாவளவன்,’’ சீமானின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது’’ என்று  ஒரு மீடியாவில் பேட்டியளித்துள்ளார். இதுபற்றி யவர் கூறியதாவது:  ‘’சீமானின் பேச்சு வேதனை அளிக்கிறது.  நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காதது சிறுபான்மையினர் மட்டுமா? இந்துக்களும்தான்.  நாம் தமிழர் கட்சி சிறுபான்மையினரை இழிவுபடுத்த வேண்டிய அவசியம் என்ன? யாருடைய அரசியலுக்கு நாம் தமிழர் கட்சி துணைபோகிறது?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.