செவ்வாய், 16 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (07:33 IST)

இந்து சமுதாயத்தை ஏமாற்ற முயற்சி.. அண்ணாமலை போராட்டம் குறித்து திருமாவளவன்..!

இந்து சமுதாயத்தை ஏமாற்ற முயற்சி.. அண்ணாமலை போராட்டம் குறித்து திருமாவளவன்..!
சனாதனத்தை மூலதனமாக கொண்டு இந்து சமுதாயத்தை ஏமாற்ற பாஜக முயற்சிக்கிறது என அண்ணாமலை நடத்திய போராட்டம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
 இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என அண்ணாமலை தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ’சனாதனத்தை மூலமாக கொண்டு இந்துக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.  
 
மேலும் அண்ணாமலையின் இந்த  சதித்திட்டத்தை இந்து மக்கள் புரிந்து கொண்டார்கள் என்றும் அதனால் தான் தொடர்ந்து திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும்  அண்ணாமலை போன்றவர்கள் சனாதன சக்திகளுக்கு  பணிவிடை செய்யக்கூடிய சேவகர்களாக இருக்கிறார்கள் என்றும் அது அவர்களுக்கான பிழைப்பு வாதம் என்றும்  திருமாவளவன் தெரிவித்தார்.
 
Edited by Siva