தொடர்புடைய செய்திகள்
- மக்களவை தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமாகும்: சசிகலா நம்பிக்கை
- வெற்றிமாறனுக்கு நன்றி கூறிய சவுக்கு சங்கர்
- இந்த வாரத்தில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000.. இன்று இறுதிக்கட்ட ஆலோசனை..!
- நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர், G20 மண்டபத்தில் வெள்ளம்- அமைச்சர் உதயநிதி
- இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும், சனாதனத்துக்கு எதிராக குரல் கொடுப்போம்: அமைச்சர் உதயநிதி
சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது: நாம் தமிழர் கட்சியின் சீமான்
சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சனாதனம் குறித்த கருத்துக்களை திமுக மற்றும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திமுக பக்கம் சாய்ந்து வருவதாக சீமான் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில் தற்போது திமுகவுக்கு மேலும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது என்று திமுக கருத்தையே தெரிவித்துள்ளார்.
சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது என்றும் உலகத்தில் உழவன் தான் உயர்ந்த குடி என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் உயர்சாதியில் இந்துக்கள் என்பதால் சனாதனத்தை எதிர்க்க மாட்டார்கள் என்றும் சனாதனத்தை ஏற்பார்கள் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தெரிவித்துள்ளார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
