திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 11 செப்டம்பர் 2023 (15:32 IST)

அமைச்சர் உதயநிதி தலைக்கு விலை வைத்தது பெரிய தவறு: அண்ணாமலை

அமைச்சர் உதயநிதி தலைக்கு விலை வைத்தது பெரிய தவறு என்றும், அப்படி விலை வைப்பவர்கள் போலி சாமியார்களாக இருப்பார்கள் என்றும் தமிழக பாஜக் தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.
 
மேலும் அப்படி விலை வைத்தவர்கள் சனாதனத்தை பின்பற்றாதவர்களாக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
 
மேலும் உதயநிதி அரசியலுக்கு வந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி மிகவும் அதிகம்  அடைந்துள்ளது என்றும், குடும்ப அரசியல் என்று நாங்கள் சொல்வது ஒவ்வொரு நாளும் உண்மை என நிரூபணம் ஆகி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 கடந்த சில நாட்களுக்கு முன்னர் உதயநிதி ஸ்டாலினின் தலையை சீவி வந்தால் பத்து கோடி வழங்கப்படும் என உத்தர பிரதேச மாநில சாமியார் ஒருவர் கூறியதற்கு அண்ணாமலை தனது கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran