திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 ஜூன் 2019 (21:16 IST)

இதுக்கெல்லாம் கட்சி பொறுப்பேற்க முடியாது! கல்லூரி மாணவி தற்கொலை குறித்து திருமாவளவன்

கடலூர் மாவட்டத்தில் முகநூலில் அவதூறாக பதிவு செய்யப்பட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பிரேம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் என்பதால் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுகுறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் பாமக ராம்தாஸ் அவர்களை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
கடலூர் மாவட்டத்தில் முகநூலில் அவதூறாக பதிவிட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரேம்குமார் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், துயரச்சாவுகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை வலிய இணைத்து அவதூறு பரப்பும் செயலில் பாமக ஈடுபட்டுள்ளது
 
தனிநபர்களின் தனிப்பட்ட நட்புறவுகளுக்கோ, இன்னபிற நடவடிக்கைகளுக்கோ ஒரு இயக்கம் எப்படி பொறுப்பாக முடியும்? திட்டமிட்ட உள்நோக்கத்துடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீது வீண் பழி சுமத்துவது எந்த விதத்தில் நியாயமாகும்?  சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் ராமதாஸ் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்கப்போகிறேன். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஆபாச வலைதளங்களைத் தடை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி சமூகவலைத்தளங்களின் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும்
 
இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.