திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 13 ஜூன் 2019 (14:02 IST)

ராஜராஜ சோழன் மட்டுமல்ல,எல்லா மன்னர்களும் அப்படித்தான்:கொந்தளிக்கும் திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ராஜ ராஜசோழன் உட்பட அனைத்து மன்னர்களும் சனாதனத்திற்கு துணை நின்றார்கள் என்று கூறியுள்ள செய்தி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் சில நாட்களுக்கு முன், தஞ்சையை ஆண்ட மன்னன் ராஜராஜ சோழன், ஆதி திராவிடர்களுக்கு எதிரானவர் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

அதன் பின்பு பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீஸார், மதச்சண்டையை தூண்டுதல், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ராஜராஜ சோழன் உட்பட தமிழகத்தை ஆண்ட அனைத்து மன்னர்களும் சனாதானத்திற்கு துணை நின்றார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் திருமாவளவன், ராஜராஜ சோழன் காலத்தில்தான் சாதி ரீதியாக மிகப்பெரும் ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் பல அரசியல் கூட்டங்களில், சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து பேசிவந்துள்ள நிலையில், ராஜராஜ சோழன் பற்றிய இந்த கருத்து தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.