1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (17:38 IST)

தரையில் தண்ணீர்... இருக்கையில் நடந்தது ஏன்? திருமா பதில்!

தரையில் தண்ணீர் இருந்ததால் இருக்கை மீது நடந்து சென்றது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கம். 

 
தமிழகம் வடகிழக்குப் பருவ மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையில் அக்டோபர் முதல் நவம்பர் வரை பெய்யும் இயல்பான மழையின் அளவு 61 செமீ ஆகும். ஆனால் இந்த ஆண்டு 112 செமீ பெய்துள்ளது. இது இயல்பை விட 83 சதவீதம் அதிகம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தொடர் மழையின் காரணமாக சென்னையில் சாலைகளில், சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை சீர்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகராட்சியினர் ஈடுபடுத்தியுள்ளனர். இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தரையில் தண்ணீர் இருந்ததால் இருக்கை மீது ஏறி நடந்தார். இதற்கு கடும் கண்டணங்கள் எழுந்தன. 
 
இதைடையே இதற்கு விளக்கம் அளித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நான் தங்கியியுள்ளது வீடு அல்ல அறக்கட்டளை. ஒவ்வொரு மழையின் போதும், கழிவு நீர் சூழ்ந்து கொள்ளும். சம்பவ நாளன்று டெல்லிக்கு அவசரமாக புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இருக்கை மீது ஏறி நடந்தேன். அவசரமாக புறப்பட்ட போது நான் கீழே விழாமலிருக்க தொண்டர்கள் என்னை பிடித்துக் கொண்டனர் என தெரிவித்துள்ளார்.