புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (11:40 IST)

நடிகர்கள் ஆட்சிக்கு வரலாம் நாங்க வரக்கூடாதா! – கேப்பில் ரஜினியை வெளுத்த திருமா!

சினிமாவில் நடித்து முடித்தவர்களெல்லாம் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது நாங்கள் ஆட்சிக்கு வரக்கூடாதா என திருமாவளவன் பேசியுள்ளார்.

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசத்தை காப்போம் என்ற பெயரில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன் ”பட்டியலினத்தவர்களுக்கான நீதி என்பது யாரும் போட்ட பிச்சையல்ல அது சட்டரீதியாக அளிக்கப்பட்ட உரிமை” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ”அடுத்த சட்டசபை தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும் முக்கிய கட்சியாக விடுதலை சிறுத்தைகள் இருக்கும் என கூறியுள்ளார். மேலும் “70 வயது வரை நடித்து முடித்துவிட்டு இப்போது அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் ஆட்சியமைக்க ஆசைப்படும் போது 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் விடுதலைகள் சிறுத்தைகள் ஆட்சிக்கு வருவதில் என்ன தவறு?” என்று கூறியுள்ளார்.