திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 நவம்பர் 2019 (18:15 IST)

இந்தாண்டு மிக அதிகமாக தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர்! – மத்திய அரசு தகவல்!

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தமிழக மீனவர்கள் அதிகமாக இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது டெல்லியில் நடபெற்று வருகிறது. இதில் தமிழகத்திலிருந்து கலந்து கொண்டுள்ள எம்.பிக்கள் தமிழகம் சார்ந்த பல்வேறு தேவைகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ”கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளது. இலங்கையில் மஹிந்த ராஜபக்‌ஷே அதிபராக பொறுப்பேற்கும் இதே சமயம் மத்திய அரசு இப்படியான விவரங்களை வெளியிட்டிருப்பது மக்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. எனினும் இதற்கு மத்திய அரசு ஏதேனும் ஒரு வகையில் தீர்வு காணும் என நம்பப்படுகிறது.