திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 24 மே 2023 (08:44 IST)

சாவர்க்கர் பிறந்த நாளில் பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா.. திருமாவளவன் கண்டனம்..!

சாவர்க்கர் பிறந்த நாளான மே 28ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கட்டிடம் மே 28ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி இந்த கட்டிடத்தை திறக்க உள்ள நிலையில் ஜனாதிபதி தான் இந்த கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. 
 
ஆனால் ஜனாதிபதிக்கு கட்டிட திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் மே 28ஆம் தேதி சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:
 
சாவர்க்கர் பிறந்தநாள் மே_28 அன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறக்கவிருக்கிறார் பிரதமர்  மோடி அவர்கள். மாண்புமிகு குடியரசுத் தலைவர் 
திரெளபதி முர்மு அவர்களைப் புறக்கணித்துவிட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வை நடத்துகிறார். இது சிங்காரித்து மனையில் குந்தவைத்து மூக்கறுக்கிற கதையாகவுள்ளது.  இதனை விசிக சார்பில் கண்டிக்கிறோம். அத்துடன்,  இந்த நிகழ்வைப் புறக்கணிக்கிறோம்.
 
Edited by Siva