எஸ் வி சேகரை விட்டுடுங்க.. என்ன வந்து பிடிங்க! – திருமாவளவன் குற்றச்சாட்டு!
மனு தர்ம சாஸ்திர விவகாரத்தில் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் உண்மையாக பெண்களை இழிவாக பேசுபவர்களை விடுத்து தன் மீது வழக்குப்பதிவு செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இணைய வழி கருத்தரங்கு ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியபோது மனு தர்மத்தில் பெண்கள் தரக்குறைவாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து விசிகவினர் மனு தர்மத்திற்கு எதிராக நேற்று போராட்டம் நடத்திய நிலையில் திருமா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள திருமாவளவன் “எனது பேச்சை எடிட் செய்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாஜகவின் பேச்சை கேட்டுக்கொண்டு என் மீது வழக்கு தொடுக்கிறார்கள். பெண்களை நேரடியாக அவதூறாக பேசிய எஸ்.வி.சேகர் உள்ளிட்டவர்களை ஒன்றும் செய்யவில்லை. இதன் மூலம் திமுக கூட்டணியை கலைக்க முயற்சிக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.