மனுதர்ம போராட்டம்: திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு

thirumavalavan
திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு
siva| Last Updated: ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (08:19 IST)
சென்னையில் நேற்று மனுதர்ம நூலை எரித்து திருமாவளவன் கட்சியினர் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்திற்கு ஒரு சில அரசியல் கட்சிகள் ஆதரவு தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பெண்கள் குறித்து திருமாவளவன் பேசியது சர்ச்சையான நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் திருமாவளவனின் பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியிருந்தனர்

இந்த நிலையில் நேற்று சென்னையில் மனுதர்ம நூலை எரித்து போராட்டம் நடத்திய திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறுதல், தொற்று நோய் தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
திருமாவளன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உள்பட ஒருசில கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :