புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 8 நவம்பர் 2021 (20:02 IST)

அரசியல் வாழ்க்கையையே அழித்துவிடுவேன் என வைகோ மிரட்டினார்: திமுக எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

என்னுடைய அரசியல் வாழ்வை அழித்து விடுவேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்னை மிரட்டினார் என திமுக எம்எல்ஏ ஒருவர் குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அரசியல் வாழ்க்கையை அழித்து விடுவேன் என மிரட்டினார் என்றும் கலிங்கப்பட்டியில் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் அமைத்து தர சொல்லி வைத்து ஆவேசமாக பேசியதாகவும் சங்கரன்கோவில் திமுக எம்எல்ஏ ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்
 
சங்கரன்கோவில் திமுக எம்எல்ஏ ராஜாவின் குற்றச்சாட்டு குறித்து வைகோ என்ன பதிலளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்