புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (17:59 IST)

அரசின் மெத்தனப்போக்கே வெள்ளத்திற்கு காரணம்! – எடப்பாடியார் குற்றச்சாட்டு!

சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட அரசின் மெத்தன் போக்கே காரணம் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை கோடம்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பிறகு அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்தும் அரசு மெத்தன போக்காக செயல்பட்டதாலேயே சென்னையில் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் “கொரோனா காலத்தில் அதிமுக அரசு அம்மா உணவகம் மூலம் இலவசமாக உணவு வழங்கியது. இப்போது சென்னையில் மழை வெள்ளம் பாதித்துள்ள நிலையில் அம்மா உணவகம் மூலம் இலவச உணவு வழங்காதது ஏன்..?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.