திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (08:55 IST)

திமுகவிடம் கேட்ட இடம் கிடைக்கல… தனி சின்னத்தில் போட்டி? – திருமாவளவன் அறிவிப்பு!

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல்வேறு கட்சிகள் கூட்டணி விலகி தனித்து போட்டியிடும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் கூட்டணியாகவே தேர்தலை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு பேசிய விசிக தலைவர் திருமாவளவன் “திமுகவுடனான பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்ட இடங்கள் மற்றும் தொகுதிகள் கிடைக்கவில்லை. ஆனாலும் பேச்சுவார்த்தை இணக்கமாக முடிந்தது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் இருந்தாலும் விசிக தனிசின்னத்தில் போட்டியிடும்” என கூறியுள்ளார்.