வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 4 செப்டம்பர் 2021 (17:08 IST)

முதல்வரை சந்தித்து நன்றி கூறிய திருமாவளவன்!

தமிழக முதல்வர் சட்டசபைக் கூட்டத்தில் அயோத்தியதாச பண்டிதருக்கு வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

பூர்வபௌத்தம், திராவிடம் ஆகிய வார்த்தைகளை அரசியல் ரீதியாக முதலில் பயன்படுத்தியவர் அயோத்திய தாசப் பண்டிதர். அதுமட்டுமில்லாமல் சித்த மருத்துவம் மற்றும் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு என இவர் குடும்பத்தார் ஆற்றிய சேவை மிகப்பெரியது. திருக்குறள் ஓலைச்சுவடி பதிப்புகளை அச்சாக்கம் பெறுவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் அயோத்தியதாசரின் தாத்தாதான்.

இந்நிலையில் அயோத்தியதாசர் பண்டிதரின் 175 ஆம் ஆண்டு விழாவை ஒட்டி அவருக்கு வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டசபையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இடம் மற்றும் மேற்பட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக இது சம்மந்தமாக நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விசிக தலைவர் திருமா வளவன் முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை ‘தந்தை பெரியார் அவர்களின் காலத்திற்கு முன்பே இந்த மண்ணில் தமிழ் பௌத்தம் என்ற பெயரில் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் அயோத்திதாச பண்டிதர். அவருக்கு மணிமண்டபம் அமைக்கும் அறிவிப்பு, பூர்வகுடியினரையில் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூக நீதி களத்தில் திமுக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உடன் நிற்கும்’ எனக் கூறியுள்ளார்.