1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 4 செப்டம்பர் 2021 (10:38 IST)

பிரிட்ஜ் பின்னால் ஒளிந்து விளையாடிய குழந்தை… மின்சாரம் தாக்கி அதிர்ச்சி பலி!

கேரளாவில் சிறுமி ஒருவர் குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னர் ஒளிந்த நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயம்  அருகே உள்ள குரவிலங்காடு பகுதியை  சேர்ந்த தம்பதிகள் அலல் மற்றும் சுருதி. இவர்களுக்கு  ரூத் மரியம் என்ற மூன்று வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் விளையாடிய குழந்தை குளிர்சாதன பெட்டிக்குப் பின்னர் ஒளிந்து விளையாடியுள்ளார். அப்போது அதில் இருந்த கசிந்த மின்சாரம் பாய்ந்து சிறுமி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்க்க அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.