வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2023 (21:20 IST)

பெண்ணுடன் சென்ற வைரல் வீடியோ பற்றி விஷால் விளக்கம்

vishal with girl friend
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால். இவர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அங்குள்ள நியூயார்க் நகரத்தில் இளம்பெண்ணுடன்  சாலையில் நடந்து சென்றார்.

அவரை வீடியோ எடுப்பதை பார்த்தபோது, விஷால் அப்பெண்ணுடன் ஓடும் வீடியோ கட்சிகள் இணையதளத்தில் வைரலானது.

இதுகுறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், மன்னிக்கவும் நண்பர்கலே, சமீபத்தில் வெளியான வீடியோ பற்றி விளக்கம் அளிக்கிறேன். நான் நியூயார்க் நகரில் இருக்கிறேன். இது எனது உறவினர்களும் நான் வழக்கமாக தங்குமிடமாகும்.  இங்கு ஒவ்வொரு ஆண்டும் மன அமைதிக்காக இங்கு தங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

கிறிஸ்துமஸ் தினத்தில் என் உறவினர்களால் பிராங்க் செய்ய முடிவு செய்து அவர்களால் உருவாக்கப்பட்ட வீடியோ இது.

எனவே  உங்களின் அனைத்து  ஊகங்களுக்கும் நான் முற்றுப்புள்ளி வைக்கிறேன். இதைக் காரணமாக வைத்து என்னை குறிவைத்தனர். இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஐ லவ் யூ ஆல் என்று தெரிவித்துள்ளார்.