1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 ஏப்ரல் 2019 (12:21 IST)

அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் - தினகரன் ஆதரவாளர் அதிரடி

3 பேரை தகுதி நீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்லமாட்டோம். ஆனால் அதற்கு பதிலாக தேர்தலை சந்திப்போம் என்று தினகரன் ஆதரவாளரான அமமுகவை சேர்ந்த   வெற்றிவேல் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
நேற்று அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து அதிமுக கட்சி சின்னத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, மக்களவை தேர்தலில் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்னாசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
 
இந்நிலையில் தற்போது செய்தியாளர்களுக்கு கூறியதாவது :
 
எங்களது ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவில் இன்னும் உள்ளனர். சில அமைச்சர்களாக இருக்கின்றனர். இந்த மூன்று பேரை தகுதி நீக்கம் நீதிமன்றம் செல்லமாட்டோம். தேர்தலை சந்திப்போம் இவ்வாறு தெரிவித்தார்.