செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (15:24 IST)

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கொறடா  ராஜேந்திரன் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது 4 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. 
 
அதிமுக எதிராக செயல்படும் 4 எம்.எல்.ஏக்களான கள்ளக்குறிச்சி - பிரபு, விருத்தாச்சலம் - கலைச்செல்வன், அறந்தாங்கி - ரத்தினசபாபதி, நாகை -தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு சபாநாயகர் தனபால் இன்று நோட்டீஸ் அனுப்புவார் என்று தகவல் வெளியாகிறது.
 
அதிமுக எம்.எல்.ஏக்களாக உள்ள கலைச்செல்வன், ரத்தினசபாபதி, மற்றும் பிரபு ஆகியோர் மக்களவை தேர்தலில் தினகரனின்  அமமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 

தமிமுன் அன்சாரி திமுகவுக்கு ஆதரவு அளித்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற நால்வர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த பரிந்துரையை ஏற்று சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 
மேலும் இந்த நால்வருக்கும் நோடீஸ் அனுப்பபட்ட பிறகு 15 நாட்களுக்குள் சரியான விளக்கம் அளிக்கவில்லை எனில் இதைக்காரணம் காட்டி  அவர்கள் நால்வரையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.