ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (13:20 IST)

சாதி, மதத்தைச் சொல்லி ஓட்டுக்கேட்கிறார் ஸ்டாலின் - தினகரன் குற்றச்சாட்டு

அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஓட்டுசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட தினகரன், அமமுக என்ற கட்சியைத் தொடங்கினார். அவரது உறவினர் சசிகலாவை அக்கட்சியின் பொதுச்செயலாளராக அறிவித்துஅவர் அக்கட்சியின் துணைப் பொதுசெயலாளராக இருகிறார். சமீபத்தில் அவரது கட்சிக்குத் தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கியது.
தற்போது தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.சிதம்பரம் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் இளவரசனை ஆதரித்து ஜெயங்கொண்டத்தில் பிரசாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசியதாவது :
 
வரும் தேர்தல் மோடியையும் அவரது எடுபிடியாக இருக்கிற  எடப்பாடியையும் வீட்டுக்கு அனுப்புகின்ற தேர்தல். திமுக தலைவர் ஸ்டாலின் சாதி, மதம், குறித்து பேசி ஓட்டு கேட்கிறார். இவ்வாறு, ஸ்டாலின், சாதி, மதம் பற்றிக் கேட்டால் யாரும் ஓட்டளிக்க வேண்டாம். இவ்வாறு தெரிவித்தார்.