செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Updated : சனி, 14 அக்டோபர் 2023 (10:49 IST)

பாலஸ்தீன எல்லையில் தமிழர்கள் யாரும் இல்லை! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

பாலஸ்தீன எல்லை பகுதியில் தமிழர்கள் யாரும் இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்


 
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடந்த 7ந் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை கொண்டு அங்கிருந்து முதல் விமானத்தில் 212 பேரை அழைத்து வந்தது.

இதில் சென்னை-1,காஞ்சிபுரம் -2,மதுரை-1
கடலூர் -1,திருச்சி-3,திருவாரூர்-2,தேனி-3
புதுக்கோட்டை -1 என 14 பேர் விமானத்தில் சென்னை வந்தனர்.

மேற்படிப்புக்காகவும், திட்டப் பணிகளுக்காக மற்றும் சுற்றுலா சென்ற  114 நபர்களின் தகவல் கிடைக்கப் பெற்றது. இவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி,அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

மேலும் இஸ்ரேலில் இருந்து பத்திரமாக சென்னை விமான நிலையம் வந்தடைந்த வர்களை அவர்களது குடும்பத்தார் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம்  அமைச்சர் மா.சுப்ரமணியம் பேசுகையில், காசா போன்ற பாலஸ்தீன எல்லைப் பகுதியில் தமிழர்கள் யாரும் இல்லை. மீதமுள்ள தமிழர்களை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.டெல்லி விமான நிலையம் வருவோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தமிழ்நாடு அரசின் செலவில் அவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரப்படுகிறது என்றார்.

மருத்துவ துறையின் மேற்படிப்புக்காக ஆராய்ச்சிக்கு சென்று உள்ளனர். சிலர் வேறு தேவைகளுக்காகவும் சென்று உள்ளனர். இஸ்ரேலில் இருந்து வந்தவர்களுக்கு என்ன தேவை என்பதை கேட்டு அறிந்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு உதவப்படும். நீட் தேர்வு விலக்கு அளிக்க வேண்டும். நீட்டில் இருந்து விலக்கு பெற தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நல்லதே நடக்கும் என்றார்.

அயலக தமிழர் நலத்துறை ஆணையக கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் கூறுகையில், 114 பேர் மீட்க வேண்டும் என கோரிக்கை வந்தது. தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.இன்று இரவு ஒரு விமானம் வர உள்ளது.அங்கு உள்ள தமிழர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர்களை பத்திரமாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக அயலாக தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் தெரிவித்தார்.

போர் சூழலில் இஸ்ரேலில் நிலவரமும் அங்கிருந்து பத்திரமாக தாயகம் திரும்பிய இஸ்ரேலில் இருந்து பத்திரமாக திரும்பியதாகவும்  தமிழ்நாடு அரசின் உதவியதற்கு நன்றி தெரிவித்தனர்.