ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2023 (18:12 IST)

5 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாடு வரும் சோனியா காந்தி: நேரில் வரவேற்கும் முதல்வர் ஸ்டாலின்..!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகம் வர இருப்பதை அடுத்து அவரை நேரில் சென்று வரவேற்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி திமுக மகளிர் அணி கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து முக்கிய பெண் தலைவர்கள் வருகை தர உள்ளனர்.

குறிப்பாக சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி. சுப்ரியா சுலே, சுபாஷினி அலி, ஆனி ராஜா உள்ளிட்டோர் வருகை தர உள்ளனர். இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சோனியா காந்தி தமிழ்நாடு வருகை தர இருப்பதை அடுத்து முதல்வர் மு க ஸ்டாலின் அவரை நேரில் சென்று வரவேற்க உள்ளார்

சோனியா காந்தியின் விமானம் இன்று இரவு 10 40 மணிக்கு  சென்னை வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran