செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (07:40 IST)

பாலஸ்தீன்-இஸ்ரேல் போரால் பாதிக்கப்படுமா விடாமுயற்சி ஷூட்டிங்?

அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்து வருகிறது.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க வரும் நிலையில் இன்னொரு கதாநாயகியாக ரெஜினா கஸாண்ட்ரா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது அஸர்பைஜானில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் பாலஸ்தீன இஸ்ரேல் போர் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அஜர்பைஜான் அரசு சுற்றுலா பயணிகளை வெளியேற சொல்லி, அறிவுறுத்த சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.