திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 12 ஜூன் 2022 (07:41 IST)

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 30 மணி நேரம் காத்திருப்பு

tirupathi
திருப்பதியில் கூட்டம் அலைமோதி வருவதாகவும் இதனால் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில நாட்களாக கோடை விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக கணக்கிடப்பட்டது. தற்போது கோடை விடுமுறை முடியும் தருவாயில் இருப்பதால் ஏராளமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்து கொண்டிருக்கின்றனர். 
 
தற்போது வந்துள்ள தகவலின்படி பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து அதற்காக 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மேலும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங் களுக்கு வழங்கப்படும் விஐபி டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வார நாட்களில் நடைபெறும் விசேஷ பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது