1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (19:31 IST)

இயற்கையால் எம்.ஜி.ஆர் தொண்டர்களின் விருப்பம் நிறைவேற்றப்படுகிறது- கே.சி.பழனிசாமி

kc palanisamy
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் 24 ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த தமிழ் சினிமாத்துறையினர் ஏற்பாடு செய்தனர். ஆனால், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளன்று இவ்விழா நடக்கவிருந்ததால் அதிமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கலைஞர் 100 விழா தேதியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில் சமீபத்தில், மிக்ஜாம் மற்றும் அதிகனமழை காரணமாக சென்னையில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே மழை வெள்ளத்தை காரணம் காட்டி கலைஞர் 100 நிகழ்ச்சியை தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்பி தெரிவித்துள்ளதாவது:

''எம்.ஜி.ஆர் நினைவு நாள் அன்று கலைஞர் நூற்றாண்டு விழா கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தது. அப்பொழுதே அது தவறு வேறு தேதிக்கு மற்ற வேண்டும் என்று நான் உட்பட எம்.ஜி.ஆர் விசுவாசிகள் மற்றும் அதிமுக சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

அன்றெல்லாம் அதை கேட்காமல் தற்பொழுது மழை வெள்ளத்தை காரணம் காட்டி அந்த நிகழ்ச்சியை தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை முன்னரே செய்திருந்தால் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கிறவர்களாக இருந்திருப்பீர்கள்.

இன்றைய திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் கூட எம்ஜிஆர் தொண்டர்களின் இந்த கோரிக்கையை கண்டுகொள்ள வில்லை ஆனால் இன்று இயற்கையால் எம்.ஜி.ஆர் தொண்டர்களின் விருப்பம் நிறைவேற்றப்படுகிறது''என்று தெரிவித்துள்ளார்.