திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2023 (08:06 IST)

எம்ஜிஆர் நினைவு நாளில் தான் கருணாநிதிக்கு விழா எடுக்க வேண்டுமா? ஜெயக்குமார் கேள்வி..!

எம்ஜிஆர் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி தான் கருணாநிதிக்கு திரையுலகினர் விழா எடுக்க வேண்டுமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் கலைஞர் 100 திரையுலகினர் விழா டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளது

இந்த நிலையில் எம்ஜிஆர் நினைவு நாளில் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை நடத்த வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  எம்ஜிஆர் ஒரு சகாப்தம் என்றும்  அவரது நினைவு நாளில் கருணாநிதிக்கு விழா வைப்பது எப்படி சரியாக இருக்கும் என்று  கருணாநிதிக்கு விழா எடுக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை என்றும் ஆனால் அதை எம்ஜிஆர் நினைவு நாளில் வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.  

ஒரு மிகப்பெரிய தலைவர் மறைந்த நினைவு நாளில்  துக்கம் அனுசரிக்க வேண்டிய நாளில் கொண்டாட்டம் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் என்ன? என்றும் இதை நடிகர் சங்கம் பரிசீலனை செய்து வேறொரு நாளில் நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Edited by Siva