செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (14:30 IST)

அமைச்சர் உதயநிதி நிகழ்ச்சிகாக வைத்திருந்த 40 அடி உயர கட் -அவுட் சரிந்ததால் பரபரப்பு

cut out
தமிழகத்தில்  முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, கட்சி  நிர்வாகிகளை தேர்தலுக்குத் தயார்படுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் திமுக இணைந்துள்ள நிலையில், இதன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மும்பைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், சென்னை அடுத்துள்ள ஆவடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  40 அடி உயர  கட் அவுட் சரிந்து ரோட்டில் விழுந்தது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரோட்டில் வைக்கப்பட்ட  கட் அவுட் சரிந்து ஒரு பெண் மீது விழுந்தததில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, கட் அவுட் வைக்கத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.