1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 26 அக்டோபர் 2024 (18:17 IST)

இன்றே விக்கிரவாண்டிக்கு புறப்பட்ட நடிகர் விஜய்..? என்ன காரணம்?

Vijay Flag

நாளை தமிழக வெற்றிக் கழகம் மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் இன்றே நடிகர் விஜய் விக்கிரவாண்டி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

நீண்ட காலமாக தனது அரசியல் வருகைக்கு திட்டமிட்டு வந்த நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியை தொடங்கினார். பல்வேறு சிக்கல்களுக்கு பின் இறுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை விக்கிரவாண்டி வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

 

மாநாடு ஏற்பாடுகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் வாகன நிறுத்தம், குடிநீர், தற்காலிக சிக்னல் டவர்கள் என பல்வேறு ஏற்பாடுகளும் ஜோராக நடந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் விக்கிரவாண்டி நோக்கி வர உள்ளனர்.

 

இதனால் விக்கிரவாண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விடுதிகள் முழுவதும் புக் ஆன நிலையில் தொண்டர்கள் பலர் வீடுகளில் வாடைக்கு தங்க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று இரவுக்குள் மாநாடு பணிகள் முடிந்து த.வெ.கவினரிடம் ஏற்பாடுகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட உள்ளது.

 

இந்நிலையில் மாநாடு ஏற்பாடுகள் குறித்து பார்வையிடுவதற்காகவும், நாளைய போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் விஜய் இன்று இரவே விக்கிரவாண்டிக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்காக சிறப்பு கேரவனும் தயார் செய்யப்பட்டு விக்கிரவாண்டிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

நாளை மாலை 4 மணியளவில் மாநாடு தொடங்கும் நிலையில் நடிகர் விஜய் கட்சி கொடியை ஏற்றுதல், வானவேடிக்கை நிகழ்வுகள், நடிகர் விஜய் 600 மீட்டர் ரேம்ப் வாக்கில் சென்று ரசிகர்களை சந்தித்தல் என பல நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

 

Edit by Prasanth.K