1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (10:00 IST)

காதலித்து ஏமாற்றிய ஆசிரியை.. பள்ளி மாணவன் தற்கொலை! – வழக்கில் திடீர் திருப்பம்!

அம்பத்தூரில் கடந்த சில மாதங்கள் முன்னதாக 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவன் கிருஷ்ணகுமார். கடந்த ஆகஸ்ட் மாதம் கிருஷ்ண குமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில் மாணவனுக்கு படிப்பு சரியாக வராததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு முடிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் கிருஷ்ணகுமார் தனது பள்ளி ஆசிரியை ஒருவரோடு நெருக்கமாக இருக்கும் போட்டோவை போலீஸாரிடம் காட்டிய கிருஷ்ணகுமாரின் பெற்றோர் தனது மகன் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


இந்த புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் கிருஷ்ணகுமாரோடு நெருக்கமாக இருந்த அந்த பள்ளி ஆசிரியை சர்மிளாவை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

சர்மிளாவிடம் ட்யூசன் வந்த கிருஷ்ணகுமாருடன் சர்மிளா நெருங்கி பழகியுள்ளார். இருவரும் காதலித்ததாகவும், மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சர்மிளாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

இதனால் விரக்தியடைந்த மாணவன் கிருஷ்ணகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சர்மிளா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

Edited By: Prasanth.K