மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய கோரி போராட்டம்!
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய கோரி இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தார். அந்தப் பள்ளியின் வார்டன் சகாயமேரி தொடர்ந்து தன்னை திட்டி வேலை வாங்கியதாக கடந்த 9-ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து 19 ஆம் தேதி உயிரிழந்தார்.
அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியது காரணமில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவியை மதமாற்றம் கொடுமையால் உயிரிழந்ததாகவும் இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய கோரி அரியலூர் பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.