ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (10:10 IST)

நீட் தேர்வு பயம்!; ரிசல்ட் வரும் முன்னே மாணவி தற்கொலை! – சங்கரன்கோவிலில் அதிர்ச்சி!

நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தோல்வி பயத்தால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவநுழைவு தேர்வான நீட் தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அமல்ராஜ் என்பவரின் மகள் ராஜலெட்சிமி நீட் தேர்வு எழுதியுள்ளார். ஏற்கனவே இரண்டு தடவை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த அவர் மூன்றாவது முறையாக தேர்வு எழுதியுள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ள நிலையில் வினாத்தாளுக்கான விடைகள் உள்ள கீ பேப்பர் சமீபத்தில் வெளியானது. அதை பார்த்த மாணவி தனக்கு அதிகமான மதிப்பெண்கள் கிடைக்காது என வருந்தியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மூன்று முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாது என விரக்தியடைந்த மாணவி ராஜலெட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.