வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 7 செப்டம்பர் 2024 (12:06 IST)

புத்தக கண்காட்சியில் சாமியாடிய மாணவிகள்.! மாவட்ட நிர்வாகம் விளக்கம்.!!

Student Dance
மதுரையில் நடைபெற்ற அரசு புத்தகத் திருவிழாவில் மேடையில் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டபோது பள்ளி மாணவிகள் சாமியாடி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
 
மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது.  இதனையடுத்து நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மேடையில் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட கலந்துகொண்டு உரையாற்றினர். பின்னர்  சிறிது நேரத்தில் தொடக்க விழா நிகழ்வாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 
அப்போது பக்தி பாடல் இடம் பெற்று ஒளிபரப்பப்பட்டு கலைஞர்கள் ஆடிக் கொண்டிருந்தபோது  மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த பள்ளி மாணவிகள் பக்தி பாடல்கள் ஒளிபரப்பப்பட்டதால் அதனைக் கேட்டு சாமியாட தொடங்கினர். அப்போது சில மாணவிகள் மயங்கி விழுந்த போது அங்கிருந்த பொதுமக்கள் அவர்களுக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து இருக்கையில்  அமர வைத்தனர்.

அப்போது அங்கு இருந்த சிலர் இது போன்ற அரசின் நிகழ்ச்சியில் பக்தி பாடல் போட்டது ஏன் கேள்வி கேட்டு  அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து கலை நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு அனைவரும் புறப்பட்டு சென்றனர். அரசு நிகழ்ச்சியில் பக்தி பாடல் ஒளிபரப்பப்பட்டு அதில் மாணவிகள் சாமியாடி மயங்கி விழுந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட நிர்வாகம், அரசு இசைக் கல்லூரியை சேர்ந்த குழுவால் தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளது. நாட்டுப்புறப் பாடல் வரிசையில் தான் பாடல் பாடப்பட்டது என்று கூறி உள்ளது.

 
மாணவிகள் யாரும் மயங்கவில்லை, பத்திரமாக உள்ளனர் என்றும் மாணவிகள் மகிழ்சியாக ஆடியதால் தான் அந்த பாடல் தொடர்ந்து ஒலிக்க அனுமதிக்கப்பட்டது என்றும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.