1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2024 (12:05 IST)

அரிவாளால் வெட்டி மகன் படுகொலை..! மதுபோதையில் தந்தை வெறிச்செயல்..!

son murder
கரூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மகனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த ஒரம்புபாளையம் காமராஜ் நகரில் வசிப்பவர் சடையப்பன். இவருக்கு ஜானகி என்கின்ற மனைவியும், தேவபிரகாஷ் என்கின்ற மகனும் உள்ளனர். நேற்று நள்ளிரவில் தந்தை, மகன் இருவரும் மது போதையில் இருந்த போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.  சடையப்பன் வீட்டிலிருந்த அரிவாளால் மகனை இடுப்புக்கு கீழ் பகுதியில் வெட்டியதால் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தேவபிரகாஷை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர். இதனை தொடர்ந்து தேவபிரகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டது. 
 
Father
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீசார் சடையப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உயிரிழந்த தேவ பிரகாஷ் ஏற்கனவே அடிதடி தகராறில் சிறைக்கு சென்று தற்போது பிணையில் வந்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் கையெழுத்து இட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.