புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (10:34 IST)

வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை.! பட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம்.!!

theft
சீர்காழியில் பட்டபகலில் மளிகைகடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் வைரம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி இரணியன் நகரில் வசிப்பவர் முனியசாமி(55). இவர் அரசு மருத்துவமனை சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார்.   முனியசாமி மளிகைகடைக்கு சென்ற நிலையில்,  அவரது மனைவி பிற்பகல் வீட்டினை பூட்டிவிட்டு தானும் மளிகைகடைக்கு சென்றார். 
 
அதன் பின்னர்  மதிய உணவிற்கு முனியசாமி வீட்டிற்கு வந்தபோது வீட்டின் சில்வர்கேட் பூட்டு உடைக்கப்பட்டும், உள்ளே மரக்கதவு தொட்டி பூட்டு சாவி போட்டு திறக்கப்பட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். 
 
enquriy
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது மரபீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 65 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள், 1 கிலோ வெள்ளிபொருட்கள் திருட்டுபோனது தெரியவந்தது. 

 
இது குறித்து சீர்காழி போலீசாருக்கு தகவல் அளித்ததின்பேரில் காவல்ஆய்வாளர் சிவக்குமார் நேரில் சென்று விசாரணை செய்தார். பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை  சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.