வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 21 ஏப்ரல் 2022 (08:47 IST)

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் வந்த எஸ்.எம்.எஸ்.: அதிர்ச்சி தகவல்

vaccinated
தடுப்பூசி செலுத்தாமல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட தாக எஸ்எம்எஸ் வந்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனுடன் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று தடுப்பூசி செலுத்த காத்திருந்தார் 
 
அவருடைய ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை வாங்கிக் கொண்ட அதிகாரிகள் காத்திருக்குமாறு கூறினார். நீண்ட நேரமாக காத்திருந்தும் தடுப்பூசி செலுத்தவில்லை என்பதால் விரக்தியடைந்த அந்த பெண் தனது மகனுடன் வீடு திரும்பிவிட்டார் 
 
இந்த நிலையில் திடீரென அவரது மொபைல் போனுக்கு அவருக்கும் அவருடைய மகனுக்கும் தடுப்பூசி செலுத்தியதாக எஸ்.எம்.எஸ் வந்துள்ளதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்