வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (17:03 IST)

மரத்தில் பதுங்கிய 10 அடி நீள சாரை பாம்பு உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

வத்தலகுண்டு ராஜன் நகர் பகுதியில் உள்ள தர்மலிங்கம் என்பவர் வீட்டில் இருந்த மரத்தில் மீது மிக நீளமான பாம்பு ஒன்று மரக்கிளையில் சுருண்டு பதுங்கி இருந்தது 
 
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மரக்கிளையில் பதுங்கி இருந்த 10 அடி நீளம் உள்ள சாரை பாம்பை மரத்திலிருந்து கீழே இறக்க முற்படும்போது  பாம்பு தப்பித்து அருகில் உள்ள வீட்டில் முன் பகுதியில் மரப்பலகைக்கு அடியில் இருப்பதைக் கண்டு தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரத்திற்குப் பின்பு லாவகமாக உயிருடன் பத்திரமாக பிடித்தனர்.
 
பின்னர் அந்தப் பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடுபட்டது. 
 
‌10 அடி நீளமுள்ள சாரப்பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் கைதட்டி நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
 
சாரை பாம்பை காண  அப்பகுதியில் ஏராளமாக பொதுமக்கள் திரண்டனர்.