வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2024 (12:21 IST)

பற்றி எரிந்த பிளாஸ்டிக் பைப்புகள்..! குப்பையில் எரிந்த தீ பரவியதால் விபரீதம்..!!

fire
ராசிபுரம் அருகே குப்பைக்கு பற்றிய தீ, காற்றின் வேகத்தில் அருகே இருந்த கூட்டுக் குடிநீர் திட்ட பிளாஸ்டிக் பைப்புகளில்  பரவி சுமார் 3 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் குழாய்கள் எரிந்து நாசமானது.
 
நாமக்கல் மாவட்டம்  குருசாமிபாளையம் அடுத்த பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நாராயணா தியேட்டர் திடலில் ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான பிளாஸ்டிக் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.   அதன்  அருகே கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு மர்ம நபர் யாரோ தீ வைத்ததாக கூறப்படுகிறது.
 
firee
இந்நிலையில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீ காற்றின் வேகம் காரணமாக அருகே இருந்த கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்களில் பரவி  கொழுந்து விட்டு எறிந்தது.


பல அடி உயரத்துக்கு கரும் புகை வெளியேறியதால் அப்பகுதியில் காற்று மாசு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில்  சுமார் 3 லட்சம் மதிப்பிலான குழாய்கள் எரிந்து நாசமானது.